இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை நிகழ்வுகள் நடைபெற்றன.
துணைத் தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து இந்திய குடியரசு தலைவரின் செய்தியை வாசித்தார்.
இந்த விழாவில் துணைத் தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், இந்திய குடிமக்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







