யாழ்ப்பாணம் இந்துக் கல்லூயின் பழைய மாணவன் லண்டனில் கொரோனாவால் பலி.
யாழ்.இந்துக்கல்லுாரியின் பழைய மாணவனும் 2004 -2005 ஆம் ஆண்டின் கல்லுாரியின் கிரிக்கெட் அணியின் தலைவனாகவும் விளங்கிய 32 வயதான மயூரப்பிரியன் கொரோனாவால் பலியாகியுள்ளான்.
இவனது இழப்பினால் யாழ் இந்துச் சமூகம் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் கொரோனாவுக்கு இலக்காகி பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மிகுந்த கவலைதரும் விடயமாக உள்ளதாகவும் அவதானமாக செயற்படுமாறும் புலம்பெயர் தமிழர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்