யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில் இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணமா இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில்
புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த பணத்தை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக மத்திய வங்கியும், புலனாய்வு பிரிவும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குறித்த இளைஞன் மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்ட நிலையில் கிராம சேவகர் ஊடாகவும், பிரதேச செயலர் ஊடாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
மறுபக்கம் அரசியல் பின்புலம் உள்ள சிலரும், போலி ஊடகவியலாளர்கள் சிலரும் குறித்த பணத்தை கிளியர் பண்ணி தருவதாக கூறி இளைஞனை சுற்ற தொடங்கியுள்ளனர்.