யாழ்.கீரிமலை கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் இரு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்.தட்டாதெருவை சேர்ந்த சஞ்சீவன் (வயது18) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.