யாழ்.நெல்லியடி நகரில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானதில் கரெவெட்டி – வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.