கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பலகைகளை ஏற்ற வந்து கொண்டிருந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் 23.02.2021 இன்று காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
உள் வீதியில் இருந்து சடுதியாக உழவு இயந்திரம் பிரதான வீதிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் யாழ் நோக்கி வந்த பாரவூர்தி வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதன் காரணத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படாத போதும் வாகனம் முற்றாக சேதமாகியுள்ளது.

