பிரபல தொலைக்காட்சியில் வெளியாகிய குக்கு வித் கோமாளி மூலமாக பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபல்யம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ள படம் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பிக்க உள்ளன என்று தெரிகிறது. இந்த செய்தி ரம்யா பாண்டியன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.