யாழ்ப்பாணம் – சுன்னாகம் றோட்டறிக் கழகம் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன் பெறக்கூடிய வகையிலான பேருந்து நிழற்குடை ஒன்று தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகாமையில் கடந்த 02.02.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தலைவர் Rtn.Phf.அனுராஜ், வலிகாமம் வடகிற்கான தவிசாளர் திரு. சோ. சுகிர்தன், யா/ யூனியன் கல்லூரியின் அதிபர் திரு. வரதன் மற்றும் யா/ தந்தை செல்வா ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு. வாமதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
றோட்டறக்ட் கழகங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விடயங்கள் அடங்கியதாக இந்த பேருந்து நிழற்குடை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் வாசகர்களும் பயன்பெறும் வகையிலான நூலகத் தொகுதி ஒன்றும் இதனுடன் இணைத்து அமைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.