இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சளாராக இருந்த ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் ஃபிரெண்ட்ஷிப் படத்திற்கான ஷூட்டிங், கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் லாஸ்லியா மரியநேசன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தற்போது ஃபிரெண்ட்ஷிப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஹர்பஜன் சிங், லாஸ்லியாவுடன், நகைச்சுவை நடிகர் சதீஷ், வெட்டுக்கிளி பாலா உள்ளிட்டோர் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர்.
மாஸான குத்துப் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. ஷூட்டிங் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், தமிழனின் தாய்மடி கீழடி. தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி. எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த Summer நம்ம படம் #Friendship வருது. தளபதி, தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தில் ஹர்பஜன் சிங் கெட்-அப்பை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜனை, அசல் தமிழ்நாட்டு ஸ்டைலுக்கு மாற்றியுள்ளனர். ஷூட்டிங்கின் போது தமிழ்நாட்டு ஸ்டைல் குத்துக்கு மாஸாக டான்ஸ் ஆடி அப்ளாஸை அள்ளியுள்ளார் ஹர்பஜன். இதனால் ‘ஃபிரெண்ட்ஷிப்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்கள் அதிகரித்துள்ளது.