வவுனியா புளியங்குளம் பகுதியில் லொறி ஒன்று இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உயர் அழுத்த மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது,
பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற லொறி வவுனியா புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள மின்சார தூணில் மோதியுள்ளது. விபத்தில் கனரக வாகனமும், மின்சார தூணும் சேதமடைந்ததுள்ளது. விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்திருந்தமையால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.