இலங்கையின் வடபகுதியில் உள்ள தீவுப் புகுதிகளில் சீனா தனது கால்களைப் பதிக்கவுள்ளது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய பகுதிகளில் தமது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.
நயினாதீவு மற்றும் நெடுந்தீவில், அனலைதீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே சீனாவுக்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் கூட்டுமுயற்சி நிறுவனமான சைனோசோர் எச்வின் நிறுவனத்துக்கு இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.