வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, நாகலிங்கம் வேதநாயகன் தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதால் ஏற்படலாம் என்ற கருதுகின்ற நிலவரங்கள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனையைக் கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது.
எனினும், அவருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்திய சுமந்திரன் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேவையாற்றியுள்ளமை, அந்தந்த மாவட்டங்கள் தொடர்பில் விரல் நுணியில் விபரங்களை கொண்ருக்கின்றமை மற்றும் அனைத்து மாவட்ட மக்களிடத்தில் காணப்படுகின்ற நன்மதிப்பு ஆகியன தொடர்பில் எடுத்துக்கூறியு அவரை அரசியலில் பிரவேசிக்குமாறு அழைத்துள்ளார்.
மேலும், வடமாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைப்பதாக இருந்தாலோ அல்லது தனித்து ஆட்சி அமைப்பதாக இருந்தாலோ இவ்வாறு துறைசார்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்று தான் கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் வேதநாயகன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றார். அதேநேரம், வேதநாயகனின் தந்தையார் நாகலிங்கம் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தமையும் அவருக்கு மேலதிக சாதக நிலைமையாக உள்ளது என்றும் சுமந்திரன் கருதுகின்றார்.
இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், வேதநாயகனை களமிறக்குவற்கான சகல தர்க்கங்களையும் கட்சினுள் முன்வைப்பதற்கு தயாராகி வருகின்றார்.