புதன்கிழமை, 21 ஜூலை 2021 – ஆடி 5
நல்ல நேரம் காலை: 9:00AM – 10:00AM
நட்சத்திரம் கேட்டை காலை 5.39 மணி வரை பின்னர் மூலம்
திதி வளர்பிறை துவாதசி இரவு 2.55 மணி வரை. பின்னர் திரையோதசி
இராகுகாலம் பகல்: 12:00PM – 1:30PM
எமகண்டம் காலை: 7:30AM – 9:00PM
குளிகை காலை 10:30AM – 1:30PM
சந்திராஷ்டமம் மேஷம்
மேஷம்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படலாம். பயணங்களால் விரயம் உண்டு.
ரிஷபம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீட்டுப் பராமரிப்புச் செலவு கூடும். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
மிதுனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
கடகம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடை பெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு.
சிம்மம்
வரவும் செலவும் சமமாகும் நாள். எப்படி நடக்குமோ என நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கலாம். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். திடீர் பயணத்தால் திரவிய லாபம் உண்டு.
கன்னி
நினைத்தது நிறைவேறும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சர்யமளிக்கும். நண்பர்கள் சுபச்செய்திகளைக் கொண்டுவந்து சேர்ப்பர். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
துலாம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கினிய சம்பவ மொன்று நடை பெறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
விருச்சிகம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். எதிரிகள் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். மறதியால் விட்டுப்போன காரியமொன்றை மீண்டும் செய்து முடிப்பீர்கள். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.
மகரம்
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். செல்வநிலை உயரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடை பெற்று மகிழ்ச்சியை வழங்கும். உடன் பணிபுரியும் ஒருவரால் நன்மை ஏற்படும்.
கும்பம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உறவினர்களின் உதவி கிட்டும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் நாட்டம் ஏற்படும். தொழில் சம்பந்தமாகச் சிலரைச் சந்தித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மீனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றச் சிந்தனை உருவாகும்.