வெள்ளிக்கிழமை, 2 ஜூலை 2021 – ஆடி 18
நல்ல நேரம் காலை: 10:00AM – 10:30AM
பகல்: 1:00PM – 3:00PM
இராகுகாலம் காலை: 10:30AM – 12:00PM
குளிகை காலை 7:30AM 9:00AM
எமகண்டம் மாலை: 3:00PM – 4:30PM
திதி தேய்பிறை அஷ்டமி, இரவு 7:36PM
நட்சத்திரம் ரேவதி 8:16 முதல்
சந்திராஷ்டமம் சிம்மம்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. திருமணபேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நேற்று செய்யாமல் விட்டுப்போன காரியமொன்று இன்று வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
சிந்தனை ஆற்றலால் சிறப்படையும் நாள். பிள்ளைகளின் நீண்ட நாளைய கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகும்.
சிம்மம்
விமர்சனங்களால் நட்பில் விரிசல் ஏற்படும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாது இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பின்னர் வருத்தமடையலாம்.
கன்னி
பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். பாதியி்ல் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். பொருளாதார நிலை உயர எடுத்த முயற்சியில் பலன் உண்டு
துலாம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சிகம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் மூலம் தொகை வந்து சேரும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
தனுசு
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. சிலருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது பாடுபடுவீர்கள். இடமாற்றச் சிந்தனை ஏற்படும்.
மகரம்
பழைய சம்பவங்களை அசை போட்டுப் பார்க்கும் நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். உறவினர்களால் வந்த குழப்பங்கள் அகலும். பிறர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கும்பம்
நல்ல தகவல் நாடிவந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மீனம்
தொழில் சீராக நடைபெறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். வருமானம் உயர வழிபிறக்கும்.