நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது. முதலாவதாக உத்தரதேவி கடுகதி புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் பின்னர் காலை 6.10 ற்க்கு புறப்படுகின்றது, காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ். தேவி புகையிரத சேவை ஆரம்பமாகி இருக்கின்றது.
அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ். தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது.
ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.
பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்