வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் துப்பாக்கி சூ.ட்டுக்கு இலக்காகி முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முசல்குத்தி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் குழு ஒன்று இராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இராணுவ தரப்பு கூறியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு கூறுகையில்,
வில்பத்து வனப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளுக்கு சென்றிருந்த இராணுவத்தினர் மீது ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேர் கொண்ட குழு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், பதிலுக்கு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தப்பி ஓடியோரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
ஆனால் காட்டில் விறகு வெட்ட சென்றவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞன் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.