மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொளவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இம்மாதம் 30 ஆம் திகதி வரை சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சலுகைக் காலத்தில் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என மேல் மாகாண செயலகத்தின் ஊடக பேச்சாளர தெரிவித்துள்ளார்.