பேரணியில் கலந்து கொண்டதற்காக வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் சென்றிருந்த நிலையில் தனது தொலைபேசியில் செல்வி பதிவேற்றியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக் கொண்டமைக்காக, தம்மிடம் வடக்கு மற்றும் கிழக்கு பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொண்டதாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக் கொண்டிருந்த பலரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.