கோண்டாவில் செபஸ்ரியன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் 6 பவுண் தாலிக் கொடியை அபகரித்து சென்ற குற்றச்சாட்டில் 3 பேர் யாழ் மாவட்ட மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கோண்டாவில் பகுதி வீட்டில் இன்று(08.02.2021) அதிகாலை வீட்டுக்குள் புகுந்த குழுவினர் வீட்டில் இருந்தவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் காயப்படுத்தி விட்டு அவரின் தாலிக்கொடியை அறுத்து தப்பிச் சென்றிருந்தனர்.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிப்புரைக்கமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரான்ஸிஸ் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வீட்டிலிருந்து அபகரிக்கப்பட்ட தாலிக்கொடியை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வீட்டு மலசல குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றினர்.
மற்றைய சந்தேக நபரின் வீட்டிலிருந்து இரண்டு பெரிய வாள் மற்றும் 250 ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளார்கள்.