வடக்கு – கிழக்கு தமிழர்களுடைய வாழ்வுரிமையை மறுக்கும் செயற்பாடுகளை கண்டித்து தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் சர்வகட்சிகள் அவசர கலந்துரையாடல் ஒன்று இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ் மேயர் மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த கலந்துரையாடலை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.