மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத நாளே என்று தான் சொல்லலாம். வாழ்க்கையில் ஏற்படும் தீராத கஷ்டங்களை போக்க தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. அந்தவகையில் எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்று விட விநாயாகரை மனதார நினைத்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்தாலே போதும்.
தற்போது அந்த பரிகாரத்தை வீட்டில் இருந்தப்படி எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
பரிகாரம்
திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது.
உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. தோரண கணபதியின் முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விநாயகருக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் நாட்டு சர்க்கரையை கலந்து, இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, கலந்த கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் போதும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, உங்கள் கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிற்கோ அல்லது எறும்புகளுக்கோ, அல்லது காக்கை குருவிகளுக்கோ உணவாக அளித்து விடலாம்.
பயன்
உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும் தீர்ந்துவிடும்.