பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் நீர் குழாய் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனத்தின் முன்பாக வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கீழே விழுந்த தலைக்கவசத்தை எடுப்பதற்காக நிறுத்திய நிலையில் கப் வாகனத்தை சாரதி நிறுத்த முயன்றபோதும் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம்
வீதியின் ஓரத்திலிருந்த நீர் குழாய் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் கப் வாகனத்தில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.