மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகள் விலக நேரிடும். பயணங்களால் தொல்லை உண்டு.
ரிஷபம்
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். வளர்ச்சி கூடும். பிள்ளைகளின் உத்தியோக முயற்சி பலன் தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். சுபச் செய்திவந்து சேரலாம்.
மிதுனம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். ஊர்மாற்றச் சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
கடகம்
சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மங்கையரால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறும். தொழில் முன்னேற்றம் உண்டு.
சிம்மம்
செலவுகள் அதிகரிக்கும் நாள். சிரித்துப்பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலனில் அக்கறை தேவை.
கன்னி
அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உருவாகும். பழைய வாகனத்தைப் புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும்.
துலாம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். சகோதர வழிச்சச்சரவுகள் அகலும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
வருமானம் திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிட்டும். திருமண முயற்சி கைகூடும். தெய்வீகத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். மனக்குழப்பம் அகலும்.
மகரம்
விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். இடமாற்றத்தால் இனியமாற்றம் கிட்டும். தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.
கும்பம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். எதிரிகள் விலகுவர். மங்கலநிகழ்ச்சிகளில் கலந்துகொள் ளஅழைப்புகள் வந்துசேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடிவடையும்.
நன்றி – மாலைமலர்