டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.
இந்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதை அடுத்து விவசாயிகள் போராட்டக் குழவினருக்கும் அரசுக்கும் இடையே நடந்த 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடக்கிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராடத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை குறித்து கேட்றிந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிங்கு எல்லையில் விவசாயிகளை சந்தித்ததிலிருந்து பாஜக-வின் டெல்லி காவல்துறையினரால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு நேரடியாக சென்று வந்ததிலிருந்து முதல்வர் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை வெளியே வரவும் அனுமதிக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்