இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் 23.02.2021 அன்று சந்தித்தனர். இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
பலாலி விமான நிலையம் மீள திறக்கப்பட வேண்டும் எனவும், மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும், ஜெனிவா வரைபு ஏமாற்றமளிப்பதாவும் அதனை திருத்தி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தீவுப் பிரச்சினை தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாகவும், வட மாகாணத்தில் வெளிநாடுகளின் ஊடுருவலை விரும்பவில்லை போன்ற விடங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.