அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி J. பிளிங்கன் (Antony J. Blinken) பதவியேற்றுள்ளார்.
58 வயதாகும் ஆன்டனி பிளிங்கன், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின் போது வெளி விவகார இணை அமைச்சராகவும் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
அவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடா்ந்து, அவர் வெளி விவகார அமைச்சராக பதவிப்பிராணம் செய்துகொண்டார்.
இது தொடா்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவரது நியமனத்திற்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
அதிபர் ஜோ பைடனின் நீண்ட கால உதவியாளரான ஆன்டனி பிளிங்கன், ‘அமெரிக்காவிற்கே முன்னுரிமை’ என்ற முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையால் பிற நாடுகளுடனான உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பைடனின் திட்டத்தை நிறைவேற்ற உதவுவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.