வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழு நாளை முதல்முறையாகக் கூடுகிறது.
வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்து கடந்த 11 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த சூழலில் ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகிய 3 உறுப்பினர்களும் நாளை முதல்முறையாகச் சந்திக்க உள்ளனர்.
நன்றி – தி இந்து