உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றிய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லை ஹிங்குல பிதேசத்தைச் சேர்ந்த 24 வயதான யுவதியொருவரே கைது செய்யப்பட்டுளளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் மேற்கொண்ட விசாரணைகளின் அடி படையில் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார் என டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.