தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் 23.02.2021 மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .மேலும், இந்த விபத்து ஹசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.