மேல் நீதிமன்றங்களுக்கான 12 புதிய நீதிபதிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (10.02.2021) வழங்கினார்.
மாவட்ட நீதிபதிகளாக கடமையாற்றிய J.ட்ரொட்ஸ்கி, V.ராமக்கமலன், N.K.D.K.I. நாணயக்கார, R.L. கொடவெல, U.R.V.B.ரணதுங்க, D.G.N.R.பிரேமரத்ன மற்றும் மஹி விஜேவீர ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலதிக மாவட்ட நீதிபதிகளாக கடமையாற்றிய S.H.M.N.லக்மாலி, W.D.விமலசிறி மற்றும் I.P.D. லியனகே ஆகியோரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவானாக செயற்பட்ட மொஹமட் மிஹைலும் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவர்களைத் தவிர, அரச சிரேஷ்ட சட்டத்தரணியாக செயற்பட்ட N.A.சுவன்துருகொடவும் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.