பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து உள்ளூர் அமைப்பொன்று விடுத்த கோரிக்கையின் பேரில் பாகிஸ்தான் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலோசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜம் இய்யதுல் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவருமான மௌலான சலா{ஹதின் அயூப் மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 16 வயதுக்கும் குறைவான பெண்களை மணப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் பலோசிஸ்தான் மாகாணத்திலிருந்து கிலா அப்துல்லாதொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் ளெலானா மவுலானா சலா{ஹதின் அயூப், ஜுகுர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாக கித்ரல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு புகார் அளித்துள்ளது.
சித்ரால் நகரில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தானின் ‘டோன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேற்படி சிறுமி பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் பயின்று வருவதால், அவர் திருமணம் செய்துகொள்ளும் வயதை அடையவில்லை. எனவே, மௌலானா சலா{ஹதின் அயூப்பின் திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தான் ஒப்சர்வர் கருத்துப்படி, எம்பி திருமணம் குறித்து அந்தப் பெண்ணுடன் தனித்துப் பேசியுள்ளார். முறையான திருமண விழா இன்னும் நடத்தப்படவில்லை.
இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் எனவும், சித்ரால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சாஜித் அஹ்மத் தெரிவித்துள்ளார் என டோன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
‘மாணவி பள்ளியில் பிறந்த திகதி அக்டோபர் 28, 2006 என குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த நிலையில் எம்.பி. மௌலானாவின் திருமணம் தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது’ என அவர் கூறியுள்ளார்.
அமைப்பின் புகாரின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சித்ரால் வீட்டின் தரூஷ் பகுதியில் உள்ள சிறுமியை காவல்துறையினர் விசாரணை நடத்தினர், ஆனால் அவரது தந்தை தனது மகளின் திருமணத்தை மறுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.