திருகோணமலை – கந்தளாய் பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தி வந்த பேயோட்டும் ஆசாமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 டிசம்பர் மாதம் தனது மகள் காணாமல் போயுள்ளதாக, சிறுமியின் தாய் சூரியபுர பொலிஸில் புகார் அளித்தார். காணாமல் போன சிறுமி குறித்து ஹாலிஎல பொலிஸார் நடத்திய விசாரணைகள் நடத்திவந்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்
15 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தி வந்த பேயோட்டுபவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கந்தளாயை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று ஹாலி எல, உடகோஹோவில பகுதியில் வசித்து வந்தபோதே ஆசாமி சிக்கியுள்ளார்.
ஹாலிஎல பொலிசார் கைது செய்யப்பட்ட பேயோட்டுபவரின் வயது 38. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பேயோட்டும் நபர், யக்கல மற்றும் கலகேதிஹேன பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் வசித்து வருகிறார். கந்தளாய் பகுதிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் ஜெயந்திகம பகுதியிலுள்ள சிறுமியின் வீட்டிற்கும் சென்றுள்ளார்.
சிறுமியுடன் உறவை ஏற்படுத்திய பின்னர், பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். வாகனமொன்றில் கடத்தி, ஹாலி எலவிற்கு அழைத்து வந்திருந்தார். ஹாலி எலவில் தொடர்பிலிருந்த பெண்ணின் வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பேயோட்டப்பட வேண்டிய பெண்களை அவர் வீட்டில் அழைத்து வந்து தங்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், சிறுமியையும் வீட்டில் தங்க அந்த பெண் அனுமதித்திருந்தார்.
சிறுமியை பொலிஸ் மீட்ட போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹாலி எல பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.