இலங்கை வாழ் மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பினை வழங்கியவர் மறைந்த மங்கள சமரவீர என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மங்களவின் மறைவை யொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தி, இலங்கை மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கத் தீவிரமாகப் பங்களித்து, நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு, நான் மிகவும் வருந்துகிறேன்.
அன்னாரது மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றுள்ளது.
