யாழ் மாவட்டத்தில் நேற்று (24) பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 239 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியசாலைகளிற்கு சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போது, மற்றும் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் தொற்றிற்குள்ளானவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக தொகுக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (வசாவிளானை சேர்ந்த 1 வயதான சிறுமியும் உள்ளடக்கம்)
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் 2 உத்தியோகத்தர்கள், ஊரெழு மேற்கில் உயிரிழந்த முதியவர் ஆகியோர் உள்ளடக்கம்)
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேர் (1 வயதான சிறுமி, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 2 பேர் உள்ளடக்கம்)
நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (1, 4, 8, 9 வயதுடைய சிறுமிகளும் உள்ளடக்கம்)
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (17 வயதான மாணவனும் உள்ளடக்கம்)
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேர் ( 2, 3, 4,15, 18, 19 வயதானவர்களும் உள்ளடக்கம்)
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் (35 வயதான தாயாரும், அவரது 4 வயது மற்றும் 42 நாள் வயதான பிள்ளைகளும் உள்ளடக்கம்)
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (13, 18, 18 வயதானவர்களும், மூளாய் கூட்டுறவு சங்கத்தில் தென்பகுதியை சேர்ந்த 3 பேரும் உள்ளடக்கம்)
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேர் (12, 14, 15, 16 வயதானவர்களும் உள்ளடக்கம்) என 239 பேர் தொற்றிற்குள்ளாகினர்.