எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்கு முன்னர் இந்நாட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னர் நாட்டின் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இன்று (26) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நாட்டு குடிமக்களுக்கு தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக் கொடுத்த பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.