கொழும்பு சுவசிரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இலங்கைக்கான கியூபா தூதுவர் அந்ரேஸ் ஹரிடோவுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பக்வெலவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தமது நாட்டில் நூறு சதவீதம் கியூபாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியே பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உலக சுகாதார தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் மற்றைய நாடுகளுக்கு அதனை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கியூபா தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.