காணாமல்போன விமானி ரொன் ஆரட் (Ron Arad) என்னவானார் என்பதைக் கண்டுபிடிக்கும், ஒரு “தைரியமான” நடவடிக்கையை இஸ்ரேலின் மொசாட் (Mossad ) உளவு நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் நப்டாலி பென்னட் (Naftali Bennett) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நீடித்த மர்மங்களில் ஒன்றை தீர்க்கும் இந்தப் பணி பற்றி மேலும் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.
1986 ஆம் ஆண்டு லெபனான் மீதான குண்டுவீச்சு தாக்குதலின் போது, விமானம் விழுந்ததில் இருந்து லெப்டினன்ட் கேணல் ஆராட், காணாமல் போன நிலையில், அவர் இறந்ததாகக் கருதப்படுகிறது.
விமானியை இஸ்ரேலியப் படைகள் பத்திரமாக மீட்ட போதும், லெபனான் ஷியா முஸ்லீம் போராளியான அமல் என்பவரால் வழிநடத்தப்பட்ட படைகளால், லெப்டினன்ட் கேணல் ஆராட் (Ron Arad) கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரு வருடம் கழித்து, அவரை விடுவிப்பதற்குப் பதிலாக, 200 லெபனான் மற்றும் 450 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், 3 மில்லியன் டொலர் பணயத்தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவரைக் கைப்பற்றியிருந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
எனினும், பாலஸ்தீனக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இஸ்ரேல் மறுத்ததால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.