நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று நாட்களுக்குள் 635 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 25 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.
25 ஆம் திகதி 209 பேரும், 26 ஆம் திகதி 214 பேரும், 27 ஆம் திகதி 212 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த மூன்று நாட்களுள் நாட்டில் 13 ஆயிரத்து 671 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.