ஹம்பாந்தோட்டை – அம்பலாங்கொடவில் 2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை கடற்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர்களால் இது கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பியகம, கடுவெல, கட்டுநாயக்க பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஒருவர் பெண்ணாவார்.