இந்தியா – உத்தர பிரதேச மாநிலத்தில் 2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 29 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கபட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் காவி நகர் பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை ஒன்று காணமல் போனது. இது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் அக்டோபர் 19ஆம் திகதி காவி நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடும்ப உறுப்பினர்களின் சந்தேகத்தின் பேரில், குழந்தையின் தந்தையின் நெருங்கிய நண்பரான சந்தன் பாண்டேவை பொலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். அவர் குழந்தையை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வந்தார்.
இந்த நிலையில், காவி நகர் பகுதியின் வீதியோர குழந்தை சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பொலிஸாரின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கொலை மற்றும் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் டிசம்பர் 29 திகதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 10 சாட்சிகள் விசாரிக்கபட்டனர் இதை தொடர்ந்து சந்தனுக்கு சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி மகேந்திர ஸ்ரீவாஸ்தவா மரண தண்டனை விதித்தார். இந்த வழக்கில் 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி :தினத்தந்தி