மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள, 20 மாடி குடியிருப்பு தொகுதியின், 18 வது மாடியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 13 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர், காயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.