திங்கட்கிழமை, 30 ஜூலை 2021 ஆவணி 14 கோகுலாஷ்டமி, வைகானச முனித்ரிய ஸ்ரீ ஜெயந்தி
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் காலை 7.45 மணி முதல் ரோகிணி
திதி தேய்பிறை அஷ்டமி
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் துலாம்
மேஷம்
கவலைகள் தீர கண்ண பிரானை வழிபட வேண்டிய நாள். அரை குறையாக நின்ற பணியைத் தொடரும் எண்ணம் கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
சான்றோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.
கடகம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
சிம்மம்
வசதிகள் பெருகும் நாள். வியாபாரத் தொடர்பு விரிவடையும். வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்க்ள. தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடுவதில் தாமதம் ஏற்படலாம்.
கன்னி
கீர்த்திகள் பெருக கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
விருச்சிகம்
எண்ணங்கள் நிறைவேற கண்ணனை வழிபட வேண்டிய நாள். எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
தனுசு
சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாள். செலவு நடைகளைக் கட்டுப்படுத்துவீர்கள். விட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். உடன் பணிபுரிபவர்களால் உருவான மனஸ்தாபம் விலகும்.
மகரம்
தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். தேசப்பற்று மிக்க ஒருவரால் திடீர் முன்னேற்றம் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். பிரபலஸ்தர்கள் உங்கள் பின்னணியில் இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். ஆதாயம் தரும் தகவல் மதியத்திற்கு மேல் வந்து சேரும்.
மீனம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.