யாழ்ப்பாணம் – கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அங்குள்ள 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்த முதியோர் இல்லத்தின் 2 பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.