2020 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் முக்கிய பொருளாதார இலக்குகள் எதிர்பார்த்ததை விட சிறந்த முடிவுகளை எட்டியுள்ளன என்றும் தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020ஆம் ஆண்டில் 101.59 டிரில்லியன் யுவான் (15.68 டிரில்லியன் டொலர்) ஆக இருந்தது, இது தற்போது 100 டிரில்லியன் யுவான் வரம்பை தாண்டிவிட்டது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் குறிப்பிட்டுள்ளது.
சீன பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் சாதகமான வளர்ச்சியை எட்டிய உலகின் ஒரே பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தலைவர் நிங் ஜிஷே கூறினார்.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக 100 டிரில்லியன் யுவானை கடந்திருந்தது. இது ஒட்டுமொத்தமான தேசிய வலு புதிய நிலையை எட்டியுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது என்பதைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரி பரிமாற்று வீதத்தின் அடிப்படையில் பார்க்கையில் சுமார் 14.7 டிரில்லியன் டொலருக்கு சமமாகவுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் சுமார் 17 சதவீதமாகும்.
2020 ஆம் ஆண்டில் சீனாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,000 டொலர்களைத் தாண்டியது, இது உலகளவில் இரண்டாவது நிலையாகும். உயர் நடுத்தர வருமான பொருளாதாரங்களுக்கிடையில் தரவரிசைப்படுத்தியது மற்றும் அதிக வருமானம் கொண்ட பொருளாதாரங்களுடனான இடைவெளியை மேலும் குறைத்தது என்றும் நிங் கூறினார்.
இதேவேளை, கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 6.5 சதவீதமாக இருந்தது, இது மூன்றாம் காலாண்டில் 4.9 சதவீதமாக இருந்தது என்று பணியகம் குறிப்பிட்டது.
2020 ஆம் ஆண்டில் தொழில்துறை உற்பத்தியானது ஆண்டுக்கு 2.8 சதவீதமும் டிசம்பரில் 7.3 சதவீதமும் விரிவடைந்தது. சில்லறை விற்பனையின் வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்தது, ஆனால் டிசம்பரில் 4.6 சதவீதமாக உயர்ந்தது.
2020 ஆம் ஆண்டில் நிலையான சொத்து முதலீட்டில் நாடு 2.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யப்பட்டதோடு சீனாவின் நகர்ப்புறங்களில் மொத்தம் 11.86 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன, இது வருடாந்த இலக்கில் 131.8 சதவீதமாகும்.
நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 5.2 சதவீதமாகவும், ஆண்டு முழுவதும் சராசரியாக 5.6 சதவீதமாகவும் இருந்தது என்று பணியகம் தெரிவித்துள்ளது.
மேம்பட்ட பொருளாதார குறிகாட்டிகள் இருந்தபோதிலும், பொருளாதாரம் கொரோனா மற்றும் வெளிப்புற சூழலில் இருந்து பெருகிவரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
பொருளாதாரம் நியாயமான வரம்பிற்குள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய நாடு கடுமையாக உழைக்கும் என்றும் பணிகளம் மேலும் தெரிவித்ததது.