புதன்கிழமை, 1 ஜூலை 2021 ஆவணி 16
நல்ல நேரம் 09:00 AM – 10:00 AM
நட்சத்திரம் மிருகசீரிஷம் பகல் 12.44 வரை பின்னர் திருவாதிரை
திதி தேய்பிறை தசமி
இராகுகாலம் 12:00 Noon – 01:30 PM
எமகண்டம் 07:30 AM – 09:00 AM
குளிகை 10:30 AM – 12:00 Noon
சந்திராஷ்டமம் விருச்சிகம்
மேஷம்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
வளர்ச்சி ஏற்படும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும். அதிகம் செலவாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடிவாகலாம்.
மிதுனம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உள்ளன்போடு பழகிய ஒருவர் உங்கள் மனக்குழப்பத்தை அகற்றுவார். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு.
சிம்மம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நண்பர்கள் மூலம் ஆச்சரியமான தகவலொன்று வந்து சேரும். மனக்குழப்பங்கள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரபலங்களின் சந்திப்பு உண்டு.
கன்னி
சுபச்செய்திகள் தொலை பேசி மூலம் வந்து சேரும் நாள். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும்.
துலாம்
விரோதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நட்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். வருமானத்தை உயர்த்தும் முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தேவைகள் பூர்த்தியாக அதிகம் செலவாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும்.
மகரம்
யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை தொடர்பு கொண்டு முடிவெடுப்பீர்கள்.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் கூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார், உறவினர் ஒத்துழைப்பு உண்டு. நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர். தொலைபேசியில் தொடர்பு கொள்வர். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்.