வியாழக்கிழமை 2 ஜூலை 2021 ஆவணி 17
நல்ல நேரம் 09:00 AM – 12:00 Noon
நட்சத்திரம் திருவாதிரை மாலை 2.51 மணி வரை. பிறகு புனர்பூசம்
திதி தேய்பிறை ஏகாதசி
இராகுகாலம் 01:30 PM – 03:00 PM
எமகண்டம் 06:00 AM – 07:30 AM
குளிகை 09:00 AM – 10:30 AM
சந்திராஷ்டமம் விருச்சிகம்
மேஷம்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பால் காரியம் ஒன்று நிறைவேறும். தொலை தூரத்திலிருந்து வரும் தொலைபேசி வழித்தகவல் மகிழ்சியைத் தரும்.
ரிஷபம்
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் நேரம் பணி புரிய நேரிடும். ஆற்றல் மிக்கவர்களின் அரவணைப்புக் கிடைக்கும். நீண்ட நாளையக் கோரிக்கைகள் நிறை வேறும். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் நாள். உத்தியோகம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். திருமணத் தடை அகலும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கடகம்
கனிவான பேச்சுகளால் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். கட ன் சுமை கட்டுக்குள் அடங்கியிருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. அன்னிய தேசத்திலிருந்து ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும்.
சிம்மம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். அத்தியாவசியச் செலவுகள் அதிகமாக ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்ததொகை வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கன்னி
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். பொருளாதார நிலை உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
துலாம்
கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடப் பிறந்தவர்களால் நன்மை உண்டு. ஒருசில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். மனக்குழப்பங்கள் அகலும்.
மகரம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொழில் முயற்சி வெற்றி பெறும். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் இனி மனம் மாறுவர். மருத்துவச் செலவு குறைந்து மனநிம்மதி கூடும்.
கும்பம்
உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக முடிப்பீர்கள். குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
மீனம்
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு தொலைபேசி வழியில் நல்ல தகவல் வரும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.