ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை 2021 ஆவணி 20
நல்ல நேரம் 07:00 AM – 10:00 AM
நட்சத்திரம் ஆயில்யம் மாலை 6.48 வரை பிறகு மகம்
திதி தேய்பிறை திரோதசி காலை 75.7 மணி வரை சதுர்த்தசி
இராகுகாலம் 04:30 PM – 06:00 PM
எமகண்டம் 12.00 Noon – 01:30 PM
குளிகை 03:00 PM – 04:30 PM
சந்திராஷ்டமம் தனுசு மாலை 6.46 மணி வரை பிறகு மகரம்
மேஷம்
எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். திறமை பளிச்சிடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கனவு பலிதம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.
ரிஷபம்
உடன்பிறப்புகளின் உதவிக்கரம் கிடைத்து மகிழும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். தொழில்ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லையே என்ற கவலை மேலோங்கும். வரவும், செலவும் சமமாகும்.
மிதுனம்
நன்மைகள் நடைபெறும் நாள்.நண்பர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம்.புதிய பாதை புலப்படும். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.
கடகம்
தன்னம்பிக்கையும். தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவம் நீங்கும். வாகன வகையில் செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பூர்வீக சொத்துத்தகராறுகள் சுமுகமாக முடியும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும்.
கன்னி
வள்ளல்களின் ஒத்துழைப்பால் வளர்ச்சி கூடும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். மூடிக்கிடந்த தொழிலை நடத்துவதா வேண்டாமா என்று சிந்திப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வீடு தேடி வரும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ் மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
தனுசு
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியநாள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. எதிலும் விழிப்புணர்ச்சி தேவை.
மகரம்
தட்டிச்சென்ற வாய்ப்புகள் தானாக வந்து சேரும் நாள். உத்தியோக மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உழைப்புத்திறமையும் வீணாகி விடுமென்ற கவலை அதிகரிக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அதிகரிக்கும்நாள். மதிய நேரத்தில் விரயம் உண்டு. கையிருப்புக் கரையலாம். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பொது வாழ்வில் உங்கள் மீது குறை கூறுவர்.
மீனம்
விரோதங்கள் விலகும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வீர்கள்.