திங்கட்கிழமை 6 ஜூலை 2021 ஆவணி 21 அமாவாசை
நல்ல நேரம் 12:00 Noon – 02:00 PM
நட்சத்திரம் மகம் இரவு 7 மணி வரை
திதி காலை 7.48 மணி முதல் அமாவாசை.
இராகுகாலம் 07:30 AM – 09:00 AM
எமகண்டம் 10:30 AM – 12:00 Noon
குளிகை 01:30 PM – 03:00 PM
சந்திராஷ்டமம் மகரம்
மேஷம்
உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.
ரிஷபம்
மனக்கலக்கம் அகலும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யும் முயற்சி கைகூடும். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஓயும்.
கடகம்
கடன்சுமை குறைய வழிபிறக்கும் நாள். உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணியாளராகும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை வழங்கும் நாள். வீட்டை அலங்கரிப்பதில் விருப்பம் காண்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அரசியல்வாதிகளின் ஆதரவால் தொழில் வளர்ச்சி கூடும்.
கன்னி
சேமிப்பு கரையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். தாயின் உடல் நலத்தில் கவனம்தேவை. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
துலாம்
புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
விருச்சிகம்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் குழந்தைகளின்மீது பாசம் கூடும்.
தனுசு
காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும் நாள். எதிலும் சிறுதடைகள் ஏற்படலாம். பிறருக்குப் பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது குடும்பத்தில் குழப்பங்கள்தோன்றி மறையும்.
மகரம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும். பயணத்தை மாற்றியைமப்பீர்கள். எதையும் திட்டமிட்டுச் இயலாது. குடும்பத்தினர் உங்கள் செயலில் குறைகாண்பர்.
கும்பம்
எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கவலைப்படும் நாள். எதிலும் நிதானம் தேவை. பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் துணிச்சலான சில முடிவெடுப்பீர்கள்.
மீனம்
கனவுகள் நனவாகும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முற்படுவீர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை உண்டு.