தெஹிவளையில் இணையதள விளம்பரங்கள் மூலம் பெண்களை விற்பனை செய்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில், 5 இந்தோனேஷிய பெண்கள் உட்பட 7 பெண்களை தெஹிவளை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதை நடத்திய விடுதி மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு மாதமாக அந்த இடத்தில் விபச்சார விடுதி இயங்கி வருவதாகவும், ஒன்லைன் ஊடாக அழகிகளை முன்பதிவு செய்ததாகவும், ரூ .10,000 முதல் ரூ. 30,000 வரை அழகிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்களும் 23 மற்றும் 39 வயதுடையவர்கள். வெள்ளவத்தை மற்றும் பாணந்துறையில் வசிப்பவர்கள். ஐந்து இந்தோனேசியப் பெண்களும் 20-40 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.