சனிக்கிழமை 11 ஜூலை 2021 ஆவணி 26 ரிஷி பஞ்சமி, மஹா லட்சுமி விரதம்
நல்ல நேரம் 10:30 AM – 12:00 Noon
நட்சத்திரம் சுவாதி 2.35 மணி வரை பிறகு விசாகம்
திதி வளர்பிறை பஞ்சமி
இராகுகாலம் 09:00 AM – 10:30 AM
எமகண்டம் 01:30 PM – 03:00 PM
குளிகை 06:00 AM – 07:30 AM
சந்திராஷ்டமம் மீனம்
மேஷம்
நிதிப் பற்றாக்குறை அகலும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொது வாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ரிஷபம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். முடியாது என்று நினைத்த காரியம் ஒன்று இன்று முடிவடையும். உத்தியோக உயர்வு கைகூடும்.
மிதுனம்
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். சிலரிடம் குடும்பப் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டாம். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். கடன் சுமை குறையும். கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்ல நண்பர்கள் ஆலோசனை சொல்வர்.“
துலாம்
தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறை வேறும் நாள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச் செய்தி உண்டு.
தனுசு
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான வாய்ப்பு உண்டு.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். நேற்றைய பிரச்சினை இன்று வெற்றி பெறும்.
கும்பம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
மீனம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக முயற்சி செய்தும் காரியங்கள் முடிவடையாமல் போகலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உறவினர்கள் உங்கள் மீது வீண்பழி சுமத்துவர்.